10 Th Stadard 8 Mark Question @ Answer-Virivanam - பத்தாம் வகுப்பு - 8 மதிப்பெண் வினா - விரிவானம் -ஒருவன் இருக்கிறான் | Tamil Online Study

 10 Th  Stadard 8 Mark Question  @  Answer-Virivanam - பத்தாம் வகுப்பு -   8 மதிப்பெண் வினா - விரிவானம் -ஒருவன் இருக்கிறான் | Tamil Online Study

இயல் -9              ப.எண் : 224

For 10 th Students  :

1.  அழகிரிசாமியின் "  ஒருவன் இருக்கிறான் "  என்னும் சிறுகதையில்  மனிதத்தை வெளிப்படுத்தும்  கதைமாந்தர் குறித்து எழுதுக .

1 . மனிதம் :

        அழகிரிசாமியின் " ஒருவன் இருக்கிறான் " என்னும் சிறுகதை  மனித நேயத்தைப் பற்றி குறிப்பிடுகிறது .
மனிதர்கள்  எப்படி இருந்தாலும்  ஒரு துணை இருக்கும் . அந்தத் துணை தான்  மனிதத்தின் வேருக்கு நீர் . அதில் மனிதம் துளிர்க்கும் . இக்கதையில்  மனிதநேயம் கொண்ட  கதைமாந்தராக வீரப்பன்  திகழ்கிறார் .
2 .வீரப்பனின்  மனிதநேயம் :
             வீரப்பன் காஞ்சிபுரத்தில்  வீடு கட்டுகிற  ஒரு மேஸ்திரியிடம் சிப்பந்தியாக  வேலை செய்து வந்தான் . அவன் ஏழையாக இருந்தான் .  பக்கத்து வீட்டு குப்புசாமியுடன்   ரொம்ப ரொம்ப சினேகிதமானான். நோய் காரணமாக குப்புசாமி வேலையை  இழந்து ,  தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக்  கொண்டிருந்தபோது ,  வீரப்பன் தான் சாப்பாடு போடுவான் . 
      சில நாட்கள் வேலை இல்லாமல்போய் வருமானம் இல்லாமல் துன்பப்படுகிற ஏழையாக இருந்தாலும்  கடன் வாங்கியாவது சினேகிதனுக்கு உதவி செய்த  விந்தை மனிதனாக  வீரப்பனைச் சித்தரிக்கிறார்  கதாசிரியர் .
 3 . குப்புசாமியின் வாழ்க்கை :
        குப்புசாமிக்கு தாய் தகப்பன் கிடையாது .  காஞ்சிபுரத்தில் தாய்மாமன் வீட்டில் தங்கி ,  ஒரு சைக்கிள் கடையில் வேலை செய்து வாழ்ந்து வந்தான் .                  தாய்மாமனும் சென்னையிலுள்ள சித்தியும் அவனது உறவுகள் . வயிற்று வலி காரணமாக ஆறேழு மாதங்களாக வேலையும் இல்லை.    சம்பாத்தியமும்  இல்லை .  
       எனவே தாய்மாமன் வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு  சென்னையில் உள்ள சித்தி வீட்டிற்கு வைத்தியம் பார்க்க வந்திருந்தான் .
4 .கட்டைத் தொட்டி ஆறுமுகம் :
        குப்புசாமி கடைக்கு எதிரே விறகுக் கடையில் வேலை செய்பவன் தான்  கட்டைத் தொட்டி ஆறுமுகம் . சென்னைக்கு உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கும் போது  குப்புசாமியைப் பார்க்க தங்கவேலு வீட்டிற்குச் சென்றான் . அங்கே அவனைப் பார்க்க முடியவில்லை .  
Important points  :
      வீரப்பன் கொடுத்து அனுப்பிய லெட்டரையும் மூன்று ரூபாயையும் ,  தன் பங்கிற்கு ஒரு ரூபாய்  நோட்டையும் , இரண்டு சாத்துக்குடி பழங்களையும்  கொடுத்துச் சென்றான் ஆறுமுகம் .
" குப்புசாமிக்கு இப்படி ஒரு நட்பா ? "
" இவன் உயிருக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கிற ஒரு ஆத்மாவும் இந்த உலகத்தில் இருக்கிறதா ?"
  ஆறுமுகத்தின்   கருணை உள்ளத்தை   அழகிரிசாமி வெளிப்படுத்துகிறார் .
5 .  என் உயிர் நண்பன் குப்புசாமிக்கு வீரப்பன் எழுதிக் கொண்டது :   
கடிதம் படித்தால்  :
         நீ இங்கிருந்து  போனதில் இருந்து  போனதிலிருந்து என் உயிர் இங்கே இல்லை . தா உன் ஞாபகம் தான் . கடவுள் அருளால்  நீ உடம்பு சௌக்கியமாகி வரவேண்டும்  என்று தினமும் ஒரு தடவை கோயிலுக்குப் போய் கும்பிடுகிறேன் . எனக்கு இப்போது வேலை இல்லை . 
    கொஞ்ச நாட்களாக வருமானம்   இல்லாமல் இருக்கிறேன் . நேற்று  கட்டைத் தொட்டி ஆறுமுகம் பட்டணம் போவதாகச் சொன்னான் . உடனே ,  ஓடி  மூன்று ரூபாய் கடன் வாங்கி அவனிடம் கொடுத்து அனுப்பி இருக்கிறேன் . நானே வரலாம் என்று பார்த்தேன் . வந்தால் இந்த 3 ரூபாயும் பஸ்ஸூக்குச் செலவாகிவிடும் . உனக்குச் சமயத்தில் உதவியாக இருக்கும் என நினைத்து ,  நான் ரூபாயை செலவழித்து கொண்டுவராமல் ,  ஆறுமுகத்திடம் கொடுத்து அனுப்பி இருக்கிறேன் . இன்னொரு இடத்திலும் பணம் கேட்டிருக்கிறேன் . கிடைத்தால் நான் சீக்கிரம் உன்னைப் பார்க்க வருவேன் .  உன்னைப் பார்த்தால்தான் நான் தின்னும் சோறு ,சோறாக இருக்கும் .
                                                                                                                                   உன் நண்பன் ,
                                              க. வீரப்பன் ,
                                               காஞ்சிபுரம் .
Important points  :
        கடிதத்தைப்  படித்தவர் கண்களில் கண்ணீர் வெளிப்பட... மனைவியை அழைத்து   " குப்புசாமியைப் பாக்க ஆஸ்பத்திரிக்குப் போய் வருவோம் "
  
       " ஒரு டஜன் சாத்துக்குடி  வாங்கிக் கொண்டு போகலாம் "   என்ற போது  
" குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான் ' . ' குப்புசாமிக்கு மட்டுமா ? '
' எனக்குமே ஒருவனாக  அவன்  இருக்கிறான் "   என பழங்கள் வாங்க  கடைத்தெருவுக்குப் போனார் .
6 . முடிவுரை :
             வறுமையிலும்   குப்புசாமிக்கு உதவும் மனப்பான்மை , சம்பளம் இல்லாதபோது  கடன் வாங்கி உதவும் கருணை உள்ளம் , 
 உறவினர் ஒதுக்கிய போதும்  அளவற்ற அன்பு பாராட்டும்  பரந்த உள்ளம் கொண்டவராக  வீரப்பனின் மனிதத்தை  வெளிப்படுத்தும் கதைமாந்தராக   அழகிரிசாமி   உருவாக்கியுள்ளார் . 


    


---------------------------------------------------------------------------------------------------
     
 

Comments