10 Th Standard - 8 Mark Question @ Answer -Virivanam - நெடுவினா - விரிவானம் -பாச்சல் - 8 மதிப்பெண் வினா | Tamil Online Study

 10 Th Standard  - 8 Mark Question @ Answer -Virivanam - நெடுவினா - விரிவானம் -பாச்சல் - 8 மதிப்பெண் வினா | Tamil Online Study

Essay Writing  :
இயல் - 6                ப.எண் : 139

1. தன் கலையைப் பின்பற்ற,  தகுந்த வாரிசு உருவாகிறபோது  அவன் கொள்கிற மகிழ்ச்சி அளப்பரியது . இதனை " பாய்ச்சல் " கதை வழியாக நிறுவுக .


1. முன்னுரை :
           சா. கந்தசாமி  என்பவர் " பாய்ச்சல் " என்னும் கதையை எழுதியுள்ளார் . இக்கதை "  தக்கையின் மீது நான்கு  கண்கள் "  என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது . இக்கதையில் உண்மைக் கலைஞன்  முழு ஈடுபாட்டுடன் காட்டுவான் .தன்  கலையைப் பின்பற்ற  தகுந்த வாரிசு உருவாகிறபோது   அவன் கொள்கிற மகிழ்ச்சி  அளப்பரியது .

2. அழகைக் கவர்ந்த மேளதாளம் :
        தெருமுனையில் ஏதோ சத்தம் .  அழகு  தலையை நீட்டிப் பார்த்தான்.   பெரிய கூட்டம்,  மேளம் கடகடவென்று இரைந்து கொண்டிருந்தது.  சிறுவர்கள் புழுதி பறக்க ஓடிக் கொண்டிருந்தார்கள் .
       நாதசுரமும் இசைக்க  ஆள் உயர குரங்கு ஒன்று  மரத்தின் மேலிருந்து கீழே இறங்குவது தெரிந்தது .  தான் கண்டதை நம்ப முடியவில்லை . இப்போதுதான் கண்டது குரங்கு அல்ல அனுமார் தான்  என நினைத்து ஆவல் பெருக முண்டியடித்துக்கொண்டு கூட்டத்தில் நுழைந்தான் .
Well  Reading  :
3.  அனுமார் ஆட்டம் :
        சதங்கையும் மேளமும் நாதஸ்வரமும் ஒன்றாக இசைக்க  அனுமார் தாவிக்குதித்துக்  குறுக்கும் நெடுக்குமாக பாய்ந்து சென்றார் . நீண்ட வால் மேலே சொல்ல என்று சரேலென்று தரையில் படர்ந்து புழுதியை கிளப்பியது . அழகால் நிற்க இயலவில்லை  தானே அனுமார் போல மாறுவது போன்று கால்களை அழுத்தி ஊன்றி  நின்றான் .
        அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம் . உடம்பை ஒரு குலுக்கு குலுக்கினார் .தீயின்  ஜுவாலை அலைபாய்ந்தது .   சிறிது நேரம் ஆட்டத்திற்குப் பின் மெல்ல மெல்ல தீ தணிந்தது .
4.. அழகு வாலை எடுத்து செல்லுதல் :
        ஆட்டம்  முடிந்ததும் அனுமாரின் வாலை  அழகிடம் கொடுத்து
 "ஒம்  பேரு "  என்றார் .
    "அழகு "
  "  கூட வரல்லே "  என்றார்.
  அழகு தலையசைத்தான் .
" செத்த வச்சுக்க வந்துடறேன் "  என்றார் .
   அழகு  கைகளால்  மொசு மொசுப்பானை வாலைத் தடவி விட்டு  அனுமார் கூடவே ஓடினான் .
5. அனுமார் பணம் வாங்குதல் :
          ஹாரன் அடித்து கொண்டு வந்த காரை  ஒருவன் கை நீட்டி  வழிமறித்தான் . அனுமார் வாலைச் சுருட்டி மேலே வீசி அவனைப் பின்னுக்கு இழுத்தார்.
கூட்டம் விசிலடித்து கை தட்டியது.
     அழகு தரையில் இருந்து எம்பி எம்பிக் குதித்தான் . அனுமார் செயல்களிலேயே அது ரொம்பவும் சுவாரசியமாகவும் குறிப்பிடுவதாக இவனுக்கு இருந்தது  . 
       கார்  ஊர்ந்து முன்னே வந்தது . காரில் இருந்தவன் ,  பணத்தை அனுமார் பக்கம் நீட்டினான்.  அனுமார் மேளக்காரனைப் பார்க்க ,  அவன் அவசரமாக பணத்தை வாங்கி மடியில் கட்டிக் கொண்டான் .
6 . இன்னொரு பாய்ச்சல் :
         அனுமார்   இன்னொரு  பாய்ச்சல்  பாய்ந்து  வேகமாக ஆட ஆரம்பித்தார் . ஆட ஆட புழுதி புகை போல எழுந்தது .  கழுத்துமணி  அறுந்து கீழே விழுந்தது
  .     மேளமும் நாதஸ்வரமும்  அவர் ஆட்டத்தோடு இணைந்து செல்ல முடியவில்லை . மேல் மூச்சு வாங்க அனுமார் ஆட்டத்தை நிறுத்தினார் . அயர்ச்சியோடு  மேளக்காரன்  தவுலை இறக்க  ஆட்டம் முடிந்தது .

7.  ஆலமரத்தடியில்  பணம் பிரித்தல் :
        அனுமார் ஆலமரத்தில் சாய்ந்து கொண்டார் . மேளக்காரன்   ஆட்டத்தில் சேர்ந்த பணத்தை  பிரித்துக்  கொடுத்தான் . அனுமார் அப்பணத்தை  ராமுவிடம் கொடுக்கும்படி  கைகாட்டினார் .
8 . ஆற்றங்கரை கோவில் :
         அனுமார்  ஆற்றங்கரையை ஒட்டிய  கோவில் தூணில்  சாய்ந்துகொண்டு உட்கார்ந்தார் .  பிறகு வாலைப் பிடுங்கி போட்டார் . அப்புறம்  வாய் ,இடுப்பு , வேட்டி , மார்புக்கச்சை ,ராமர் படம்,கால் சதங்கை , கை சதங்கை.... ஒவ்வொன்றையும் எரிச்சலோடு வீசியெறிவதுபோல இவனுக்கு தோன்றியது .
      அழகின் கையைப் பற்றிக் கொண்டு , 
 "ஆட்டம்மெல்லாம் பார்த்தாயா ?" என்றார் .
"  பார்த்தேங்க ;  ரொம்ப ஜோருங்க "
'  வாயில நெருப்பு வச்சிக்கிட்டப்ப  ஊரே எரியப்போவுதுன்னு நெனச்சேன் '   அனுமார்  கையைத் தரையில் அடித்து பெரிதாக சிரித்தார் .

"  எனக்குக்கூட உங்கள மாதிரி ஆடணுமுன்னு ரொம்ப ஆசைக்கு "
'  உம்.. அப்படியா..  எங்க ஒரு சின்ன ஆட்டம் ஆடிக்காட்டு.. உனக்கு வருமான்னு பாக்கறேன் ' 
Book to read ;
  9 . அழகு  ஆட்டம்  ;     
        அழகு  தன் காலில் சலங்கை சுற்றிக்கொண்டு அனுமார் மூஞ்சியை எடுத்து மாட்டிக்கொண்டு .... தான் கண்டதையெல்லாம் ஆடிக் காட்டினான் . முதலில் ஆட்டம்  தாள கதிக்கு  இணங்கி வருவது  அனுமாருக்கு மகிழ்ச்சி அளித்தது.  
நேரம் ஆக ஆக  அடி தப்பியது . தன் போக்கில் ஆடினான் .
10.அனுமார் ஆடிக் காட்டுதல் :
   "  இங்க  பாரு "  எனனும் அழகுக்கு  அடிபோட்டு  ஆடிக் காட்டினார் .
"  என்ன பார்த்துக்கிட்டியா "  என்றார் . பிறகு  அழகை ஆடச் சொன்னார் .
அழகு  ரொம்ப நிதானமாக ஆடினான் .
அனுமார் சந்தோஷத்துடன் " பேஷ் ,  பேஷ் -  உடனே பிடிச்சுக்கிட்டீயே "    என்றார் .
  " வால்ல பந்தம் கட்டி ஆடுற ஆட்டம் ஆடு "  என்றார் .
      அழகு  சாய வேட்டியை வாலின் நுனியில் சுற்றி  நெருப்பு வைத்து ,   வாயால் ஊதி  அனுமாரை நோக்கிப் பாய்ந்தான் .
11 .அனுமாரை மிஞ்சிய  அழகின்  ஆட்டம் :
        அனுமரால் உட்கார்ந்திருக்க முடியவில்லை . எழுந்து  அம்பு போல  இவன் முன்னால் பாய்ந்து  கீழே விழப் போனவர்  கையை ஊன்றி  சமாளித்து இவனைத் திரும்பிப் பார்த்தார் .
    அழகு பற்கள் எல்லாம் வெளியே தெரியச்  சத்தமாக சிரித்துக்  விளையாட்டு எம்பி எம்பி காற்றில் மிதப்பது போல முன்னே வந்தான் .
  அவன் தலையை ஒயிலாக ஒரு வெட்டு வெட்டி பின்னுக்கு சென்றான் .

    "  என்னாடாலே ,  எனக்கா பாச்சுக் காட்டுற "   அனுமார் கத்திக்கொண்டே அவனைப் பிடிக்க பாய்ந்தார்.  அவன் குனிந்து பிடியில் சிக்காமல் நழுவ - -----
அனுமார் கால்கள் பின்னிக்கொள்ள தரையில் விழுந்தார் .
       அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல் தன்  ட்டத்தில் கழித்தும் உற்சாகம் பொங்க வேகமாக ஆடிக்கொண்டிருந்தான் .

                              Daily mass readings
-------------‐----------------------------------------------------------------------------------------------------


Comments