பத்தாம் வகுப்பு - 3 மதிப்பெண் வினாக்கள்- காட்சியைக் கண்டு கவினுற எழுதுதல் - 10 Th Standard - Katchiyai kandu kavinura eazhuthuthal - | Tamil Online Study

 பத்தாம் வகுப்பு -  3 மதிப்பெண் வினாக்கள்- காட்சியைக் கண்டு கவினுற எழுதுதல்  -  10 Th Standard - Katchiyai kandu kavinura eazhuthuthal - | Tamil Online Study

கவிதைகள்  - எளியமுறை - Kavithaigal - Easy Method


------------------------------------------------------------------------------------------------

இயல் -1         ப.எண்  :23


தலைப்பு :  வாய்ப்பூட்டுஅறிவுப் பூட்டைத் திறந்து
புத்தகத்தைப் படித்து
கண்களால் பார்த்து
மூளையிலே நிறுத்து....
அறிவுப் பூட்டை மூடி
ஆழமாக யோசித்து
நிமிர்ந்து உட்கார்ந்து
வெற்றி பெறுவோம்....


------------------------------------------------------------------------------------------  

Kavithaigal - Easy Method

இயல் - 2    ப.எண்  : 47

தலைப்பு :  சுவாசம்


  என்....சுவாசக் காற்றே  
உன்னைத் தேடி                                            
அலைந்து திரிந்து
மண்சட்டியிலே...
மரம் நட்டு
தூய காற்றைச்
சுவாசித்து
சுகமாக வாழ்கிறேன்.----------------------------------------------------------------------------------------------
இயல் -3         ப.எண்  : 66

தலைப்பு : உணவு

எனக்கு பசிக்குது
உணவு கிடைக்குது
உன் பசிக்கு
நான் தருகிறேன்
கை நிறைய உணவு
ஓடி வா...செல்லமே  ..
ஒரு பிடி உணவெடுத்து
ஊக்கமாக சாப்பிடுவாய்....


---------------------------------------------------------------------------------------------------
இயல் - 4   ப.எண்  : 97

Kavithaigal - Easy Method

தலைப்பு :  அலைபேசி


என் முதுகில் நீ ஏற
நான் குனிந்து
நான்கு கால்களில்
நடக்கிறேன்....
சாட்டையோடு நீ
விரட்ட...
மூக்குக்கயிற்றோடு
வேகமாக ஓடுகிறேன்...----------------------------------------------------------------------------------------

Kavithaigal - Easy Method

இயல் - 5    ப.எண் : 125

தலைப்பு  :  மரம் வளர்ப்போம்


வெட்ட வெளியிலே
மண் தரையிலே
அமர்ந்துகொண்டே....
வாத்தியார்  பாடம்
கற்றுக்கொடுக்கிறார்..
மரம் வளர்ப்போம்..
மழை பெறுவோம்..


------------------------------------------------------------------------------------------------------
இயல் - 6      ப.எண்  : 152

தலைப்பு :  ஒயிலாட்டம்


இடுப்பிலே துண்டு
கையிலே துண்டு
தலையிலே துண்டு
இடையிலேயும் துண்டு...
மேளம் கொட்ட....
சத்தமுடன் ....
இசைந்து ஆடிடுவோம்....
மகிழ்ந்திடுவோம்....----------------------------------------------------------------------------------------------------
இயல் - 7     ப.எண்  : 182

Kavithaigal - Easy Method

தலைப்பு : உழவன்

காலையில் சூரியன்
உதிக்க...
கனவோடு கலப்பை
தூக்கி.....
வயலுக்குச்  சென்றே
உழவு உழுது...
விவசாயம்
காத்திடுவோம்.....


------------------------------------------------------------------------
இயல் - 8      ப.எண்  :201


தலைப்பு : உதவி
அன்பாய் இரு..
ஆற்றல் பெறு..
இன்பம் பெறு...
ஈகைக் கொடு
உண்மைப் பேசு
ஊக்கம் பெறு
எப்போதும் கொடு
ஏழைக்கு உதவு
ஐவிரலால் தடு
ஒற்றுமையாக இரு
ஓடி விளையாடு....


-------------------------------------------------------------------------------------------
இயல் - 9   ப.எண்  : 229

Kavithaigal - Easy Method

தலைப்பு :  உதவி


ஒரு கையில் கைபேசி
மறுகையில் உதவி
பாட்டிக்கு பசி
பாத்திரத்தில் உணவு
கைபேசியிலே
படமெடுத்து...
பசி ஆறாது...
மூத்தோருக்கு உணவிடு ....------------------------------------------------------------------------------------------------


 

Comments