9 Th Standard 8 Mark Question @Answer - Virivanam - ஒன்பதாம் வகுப்பு - 8 மதிப்பெண் வினாக்கள்- விரிவானம் - விண்ணையும் சாடுவோம்

9 Th Standard 8 Mark Question @Answer  - Virivanam -  ஒன்பதாம் வகுப்பு - 8  மதிப்பெண் வினாக்கள்-  விரிவானம்  -  விண்ணையும் சாடுவோம்


இயல் -  4          ப.எண் :117


1. இந்திய விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க .

For 10 th Students

1.  விக்ரம் சாராபாய்  :
         ' இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை '  என்று   அழைக்கப்படுகிறார் . ஆரியபட்டா என்ற முதல் செயற்கைக்கோள்  ஏவுதலுக்குக் காரணமானவர் . செயற்கைக்கோள் உதவியுடன்  தொலைக்காட்சி வழியாக 
24 ,000  இந்திய கிராமங்களில் உள்ள  50 லட்சம் மக்களுக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார் . இவரது பெயரால் 
 ' விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் '  திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது .  இவருடைய முயற்சியால்             ' இஸ்ரோ '  எனப்படும்  இந்திய விண்வெளி ஆய்வு மையம்  தொடங்கப்பட்டது .



Important points :

2. அப்துல் கலாம் :
      தமிழ்நாட்டில் இராமேஸ்வரத்தைச் சார்ந்தவர் .  ' இந்திய ஏவுகணையின் நாயகன் ' என்று  போற்றப்படுகிறார் .   இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்  விண்வெளிப் பொறியாளராக பணியாற்றினார் . இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதைப்  பெற்றவர் .

Important points :
3.  அருணன் சுப்பையா :
         இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளரும் திட்ட இயக்குனரும் ஆவார் . 2013  இல்  செயற்கைக்கோளை உருவாக்கிய  இந்தியாவின்  செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குனராக  இருக்கின்றார் .

Important points :
4 .  மயில்சாமி  அண்ணாதுரை :
       ' இளைய கலாம் ' என்று அழைக்கப்படும்  இவர்  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்  கோதாவரி என்னும்  சிற்றூரில்  பிறந்தவர் . தற்போது  இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்  இயக்குனராக பணிபுரிகிறார் .  நம்நாடு நிலவுக்கு முதன்முதலில் அனுப்பிய ஆய்வுக்கலம் சந்திராயன்-1  திட்டத்தின் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் .
சந்திராயன் -2  திட்டத்திலும் பணியாற்றிவருகிறார்.  
சர்.சி.வி இராமன் நினைவு அறிவியல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப்  பெற்றவர் . ' கையருகே நிலா ' என்னும் நூலை எழுதியுள்ளார். 

5 . சிவன் :
       இஸ்ரோவின் தற்போதைய தலைவர் .  நாகர்கோவில் சரக்கல்வினை என்ற  கிராமத்தில்  மாங்காய் வியாபாரக் குடும்பத்தில் பிறந்தவர் . கணினி அறிவியல்  , வானூர்திப் பொறியியல் படிப்புகளை முடித்து, விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் பொறியாளர் ஆனார் .    இவர் உருவாக்கிய 'சித்தாரா '  என்னும் செயலி இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறைக்கு முக்கியமான பங்களிப்பு எனக் குறிப்பிடுகிறார் .

Important points :

6 . செயற்கைக்கோளின் பயன்கள் :
   1 .  விவசாயம் ,  நீரின் அளவு , கடலில்  அதிமாக மீன்கள் கிடைக்கும் பகுதிகள்  ஆகியவை தெரிந்து கொள்வதற்குப் பயன்படுகிறது  .
  2 . பொதுமக்களுக்கு  திறன்களைப் பயன்படுத்துதல் ,  தானியங்கி பணம் இயந்திரம் ,  அட்டை பயன்படுத்தும் இயந்திரம்  இதற்கெல்லாம்  செயற்கைக் கோள்கள் பயன்படுகிறது .
  3 .சித்தாரா -  செயலி :
   செயற்கைக்கோள் ஏவு ஊர்தி  பற்றிய முழு  விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும்  செயலி ஆகும்.
  4.  நேவிக் - செயலி : 
         இது கடல் பயணத்திற்காக உருவாக்கப்பட்டது . கடலில் மீன்கள் அதிகமாக  உள்ள இடங்களைக் கண்டுபிடிக்க  அனைத்து  மீனவர்களுக்கும்  பல விதங்களில் பயன்படும் .
 5 . சந்திராயன் - 1  :
  நிலவின் புறவெளியை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது .
 6.  சந்திராயன்  - 2 :
  ஆய்வுப்பயண ஊர்தி இறங்குதலை நிலவின் மேற்பரப்பில்  துல்லியமான  கட்டுப்பாடுகளின் மூலம் செயல்படுத்த உள்ளனர் . ரோவர் எனப்படும்  ஆராயும் ஊர்தி ,  ரோபோட்டிக் தொழில்நுட்ப உதவியினால்  தானாகவே வெளிவந்து , நிலவில் இறங்கி 14 நாள்கள் பயணிக்கும் . பல்வேறு பரிசோதனைகளை அங்கு மேற்கொள்ளும் .இது  நிலவில் இறங்கும் இடத்தைக் கூடத்  தீர்மானித்து விட்டோம் என இந்திய விண்வெளித்துறையின் தலைவர்  சிவன் அவர்கள் குறிப்பிடுகிறார் .






----------------------------------------------------------------------------------------------------


      






------------------------------------------------------------------------------------------------------- 

Comments