9 Th Standard -Essay writing -8 Mark Question -Virivanam - ஒன்பதாம் வகுப்பு - மதிப்பெண் வினா -விரிவானம் - தண்ணீர் ।Tamil Online Study

  9 Th Standard -Essay writing - 8 Mark Question -Virivanam - ஒன்பதாம் வகுப்பு - 8 மதிப்பெண்   வினா -விரிவானம் - தண்ணீர் ।Tamil Online Study


இயல் 2   பக்க எண் : 57

For 9 th Students 

1. ' தண்ணீர் '  கதையைக்  பொருள் குன்றாமல் சுருக்கித் தருக .

Essay writing :

  குறிப்பு சட்டகம் :


முன்னுரை

இந்திரா ரயிலுக்கு ஓடுதல்

ஸ்டேசன் மாஸ்டர் திட்டுதல்

நல்ல தண்ணீர் கிணறு

இந்திரா கனவு

பாய்ண்ட்ஸ்மேன் பஞ்சாயத்து

ரயிலின் முதல் ஒலி

அக்கா இன்னும் வரலை

அம்மாவின்  அழுகை 

இந்திரா  வருகை
முன்னுரை :
            தண்ணீர் சிறுகதை " கந்தர்வன் "  என்பவரால் எழுதப்பட்டது .   தண்ணீரின் இன்றியமையாமை ,  தேவைகளைச் சிற்றூர்களில்  நடைபெறும் வாழ்க்கைச் சிக்கலை  இக்கதையின் மூலம் அறியலாம் .

இந்திரா ரயிலுக்கு ஓடுதல் :
   இந்திராவிற்கு தூரத்தில் ரயில் வருவது  மங்கலாகத் தெரிந்தது.  அம்மா ' பொட்டுத் தண்ணி இல்லை ' என்றாள் . ஐயா எப்போதும் ஆடு குட்டி போடும் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார் .  இந்திரா குடத்தைத் தூக்கிக் கொண்டு, ஏழெட்டுப் பெண்களை முந்திக்கொண்டு  ஓடினாள் .  அனைத்துப்  பெண்களும் புயல் நுழைவது போல்  ரயில் நிலையத்துக்குள் பாய்ந்தார்கள் .

For 9 th Students 
ஸ்டேசன் மாஸ்டர் திட்டுதல்:
  இந்திரா படு கெட்டியான பெண் . அனைவருக்கும் முன்பாக இடம்பிடித்து நின்றாள் . ஸ்டேசன் மாஸ்டர் வெள்ளை உடைகளோடும் பச்சைக் கொடியோடும்   வந்தவர்   " ஒரு நாளைக்கு ஸ்குவார்டை வரச்சொல்லி  எல்லோரையும் அள்ளிக்கிட்டுப்  போயி  ஜெயில்ல போடுறேன் " என்றார் .
    ரயில்  காட்டு யானை பிளிரிக் கொண்டு வருவது போல நிலையத்துக்குள்  நுழைந்தது . இந்திரா குடத்தோடு பெட்டிக்குள் பாய்ந்தாள் .  முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி ,  அரைச் சொம்பும் கால் சொம்புமாக  பிடித்துக் குடத்தில் ஊற்றிக்கொண்டிருந்தாள் .
     இதுதான்  நாளை சாயந்திரம் வரை வீட்டுக்குக் குடிதண்ணீர் . இதுவும் கிடையாதென்றால் நல்ல தண்ணீருக்கு  பிலாப்பட்டிக்குப் போக வேண்டும் . இந்த ஊர் , அக்கம்பக்கத்து  ஊர்களிலும்  உப்பு நீராக உள்ளதால்  நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை .

Important points 
நல்ல தண்ணீர் கிணறு :
       நல்ல தண்ணீர் தேவையென்றால்  பிலாப்பட்டிக்கு மூணு மைல் தூரம் நடக்க வேண்டும் .அங்கே  கிணற்றில் மதியம்வரை ஜனங்களும்  மதியத்திற்கு மேல் வெளியூர் ஆள்களுக்கும்  தண்ணீர் இறைக்க விடுவார்கள் . ஒரு சொட்டு சிந்தாமல் தண்ணீர் எடுத்து வந்து  வீடு திரும்பினால் பொழுது சாய்ந்து கொண்டிருக்கும் .
   அம்மா தான் தினமும் எடுத்து வருவாள். வயிற்றில் கட்டி வந்ததிலிருந்து   இந்திரா குடத்தை எடுத்தாள்.

இந்திரா கனவு :
    உள்ளூரில்  எவனுக்கும்  கழுதை நீட்டி விடக்கூடாது என்றும் பிலாப்பட்டி மாதிரி தண்ணீர் உள்ள ஊர்களிலிருந்து  பெண் கேட்டு வருவது போல கனவு காண்பாள். பிலாப்பட்டிக்கு நடந்து போய்த்  தூக்கி வந்த ராத்திரிகளில் , கால் வலியோடு விடிய விடியக்  கிடந்திருக்கிறாள்.  

For 9 th Students  :
பாய்ண்ட்ஸ்மேன் பஞ்சாயத்து :
       பெண்கள் அடிதடிச் சண்டை போட்டு   தண்ணீர் பிடிப்பதை ஸ்டேஷன் மாஸ்டர் விரும்பவில்லை . சிப்பந்திகளைக் கொண்டு ஒருநாள் வீடுவரை விரட்டினார். ஒரு பொட்டுத் தண்ணீர் கூட ரயிலிலிருந்து யாராலும் கொண்டு போக முடியவில்லை .  பக்கத்து ஊர்க்காரர் பாய்ண்ட்ஸ்மேன் . அவரை வைத்துப் பேசித்தான் ரயில் வரும்போது வரவேண்டும் தண்ணீர் கொஞ்சம்தான் பிடிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை வைத்து தண்ணீர் பிடித்தார்கள்.

ரயிலின் முதல் ஒலி :
     தண்ணீர்  குழாயில் சன்னமாக  வந்தது  பாதிக்குடம் கூட நிறையவில்லை . இன்ஜினிலிருந்து ஊதல் ஒலி வந்ததும் நகர்கிற மாதிரி இருந்தது  . ரயில் வேகம் அதிகரிக்க படபடவென்று  குடத்தைப் பாதையில் வைத்துவிட்டு குதிக்கப் போனாள். முழங்கை வரை கண்ணாடி வளையல்கள் அணிந்த பெண் ஓடிவந்து  வண்டிக்குள்   கத்தினாள் .மொழி புரியவில்லையென்றாலும் 
" தற்கொலை பண்ணிக் கொள்ளவா பார்த்தாய்  ? "  என்கிற மாதிரி ஒலித்தது .

அக்கா இன்னும் வரலை :
    சினை ஆட்டைப் பார்த்தபடி  ஐயாவிடம்  சின்னவன் ...அக்கா  இன்னும் வரலை.... என்றான் .
"எங்கெயாவது வாயளந்துகிட்டிருக்கும் . போய் நல்லாப் பாருலெ ' .
' நல்லா பாத்துட்டுத்தான் அம்மா  சொல்லச் சொன்னுச்சு ' 
       அண்ணன் வீடு ,தம்பி வீடு , மச்சினி வீடுகளிலிருந்து ஆட்கள் ஓடி வந்தார்கள் .  
 Important points  :

ராமநாதபுரம்  ரயில்வே ஸ்டேஷன் :                    

    ராமநாதபுரம் பஸ்ஸில் ஏறி  " பாசஞ்சர் ரயிலைப் பிடிப்பா "  என்று கண்டக்டரிடம் கத்தினார்கள் .

  "  பொண்ணு ரயிலோட போயிருச்சுனு  நாங்க ஈரக்குலைய  பிடிச்சிக்கிட்டு கத்துறோம் "
      கும்பல் ,  டிரைவரிடம் போய் கத்தியது.  டிரைவர் விரட்டிக்கொண்டு போய்ச் சேர்ந்தார் . 
       இவர்கள் போய் சேர்ந்த போது  நிலையத்தில் ஈ எரும்புகள் இல்லை . 
      ' குடத்தோடு ஒரு பொண்ணு எறங்குச்சா ...? என்று கேட்டால்  யாரும் பார்த்ததாகச் சொல்லவில்லை .
     மேலும் வடக்குத்தெரு , சின்னம்மா வீடு,  தெரிந்த வீடு ,  அறிந்த வீடு ,  பழக்கடை அனைத்து இடங்களிலும்   சல்லடைப்  போட்டு சலித்து பார்த்துவிட்டுக்   கவலையும் அதிசயுமாக  ஊர் திரும்பினார்கள் .

      வீட்டு வாசலில்  ஒருவர் " மெட்ராசுக்கே போயிருச்சோ புள்ளை "  என்ற சந்தேகம்  எழுப்ப... ஒருவர்  '  நாம அடுத்தடுத்த ஸ்டேஷனுக்கு போய் பார்த்து இருக்கணும்..... எங்கெயாவது  புள்ளை எறங்கித்  தெசை தெரியாம நிக்குதான்னு... இங்க உட்கார்ந்து என்ன செய்யிறது '  என்றார் .

 அம்மாவின்  அழுகை :

அம்மாவுக்கு இந்த பேச்சுகளைக் கேட்டு   குமட்டலும் மயக்கமும் வந்து  , முந்தானையை அழுத்திக்கொண்டு 'எம்புள்ள எந்த ஊரு தண்டவாளத்திலெ விழுந்து கிடக்கோ '  ஆவேசம் வந்தவள் போல் ரயில் நிலையத்துக்கு ஓடினாள் .       ஐயாவும் ஊர் ஜனமும் பின்னாலே ஓட ... .   அம்மா  தண்டவாளத்தின் ஓரத்தில் ஓட ..... ஐயா பிடித்து இழுத்து நிறுத்தி விட்டு கூர்ந்து பார்த்தார் . தூரத்தில் ஒரு உருவம் தெரிந்தது .

இந்திரா  வருகை:

    நெருங்க நெருங்க  அம்மா  தான் முதலில் கத்தினாள் . 

       'அந்தா ,  இந்திரா வருது '   இடுப்பில் தண்ணீர் குடத்தோடு  இந்திரா கூட்டத்தருகில் வந்தாள் .

      அம்மா பூரிப்பில்  விம்மிக்கொண்டு   குடத்தை வாங்கினாள் . நிறைகுடம் சொட்டுச் சிந்தாமல் கொண்டு வந்துவிட்டாள் .
மகள் வந்து சேர்ந்ததில்   மலர்ந்து போய் ஐயா கேட்டார் ....' பயமகளே.... இதையும் சுமந்துகிட்டா வரணும்;  இத்தனை  மைலுக்கும் ?'
இந்திரா சொன்னாள்...
'ஊக்கும்... நாளைக்கு வரை  குடிக்க எங்கெ  போறது  ?'

முடிவுரை :
      கந்தர்வனின் இச்சிறுகதை இந்திரா  என்ற பெண்ணின் மூலம்  தண்ணீரின் முக்கியத்துவத்தையும்  பெற்றோரின் தவிப்பையும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது . 
---------------------------------------------------------------------------------------------------------------------------


Comments