9 Th Standard Grammar - ஒன்பதாம் வகுப்பு - கற்கண்டு - வல்லினம் மிகும் இடங்கள் । Tamil Online Study

  9 Th Standard Grammar - ஒன்பதாம் வகுப்பு - கற்கண்டு -  வல்லினம் மிகும்  இடங்கள் । Tamil Online Study


இயல் -3                     ப.எண் ;78

9 th Book - Grammar : 

புத்தக சுருக்கம்  @ விளக்கம் :

1.  வல்லினம் மிகும் இடங்கள்   என்பது யாது ?
வல்லெழுத்துக்கள் க,ச ,த ,ப -  ஆகிய நான்கு எழுத்துக்களும்  மொழிக்கு முதலில் வந்து ,   நிலைமொழியுடன்  புணர்கையில்
அவற்றின்  இனமான மெய்யெழுத்துக்கள் தோன்றி புணரும் . இவை வல்லினம் மிகுதல் என்பர் .
2.  புணர்ச்சி எத்தனை வகைப்படும் ?  அவை யாவை ?
  புணர்ச்சி மூன்று வகைப்படும் :
1.தோன்றல்
2. திரிதல்
3. கெடுதல்

9 th  Book - Grammar : 

3. வல்லின எழுத்துக்களின் புணர்ச்சி இலக்கணம்  தேவைப்படுவது ஏன் ?
   சொல்லமைப்பின் கட்டுப்பாடுகளைப் பேணவும்  பொருள் மயக்கத்தைத் தவிர்க்கவும்  பேச்சின் இயல்பைப் பேணவும்  இனிய ஓசைக்காகவும்   வல்லின எழுத்துக்களின் புணர்ச்சி இலக்கணம் தேவைப்படுகிறது .

4. எந்த எந்த  இடங்களில்  வல்லினம் மிகும்  என்பதை விதிகளின் மூலமும்  எடுத்துக்காட்டுகள் மூலம் அறிதல்.
 
9 th  Book - Grammar : 

1.  அ,இ  என்னும் சுட்டெழுத்துக்களுக்குப் பின் -   அச்சிட்டு , இப்புத்தகம்
2. அந்த ,இந்த என்னும் சுட்டுப் பெயர்களின் பின் - அந்தக் காலம்,இந்தக்காலம்
3.  எ என்னும் வினா எழுத்தின் பின்-  எத்திசை
4. எந்த என்னும் வினாச்சொல்லின் பின் -   எந்தப் பணம்
5. ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்கள் -  கதவைத்திற,  காட்சியைப்பார்
6. கு என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்கள் - முதியவருக்குக்கொடு ,  ஊருக்குச் செல்
7.என, ஆக  போன்ற சொல்லுருபுகளின் பின் - எனக்கேட்டார் ,  செல்வதாகச் சொன்னார் .
8.  அதற்கு , இதற்கு , எதற்கு என்னும் சொற்களின் பின்  . -  அதற்குச் சொன்னேன் ,  கற்றுக்கொடு ,  எதற்குப் பதில் ?
9.  இனி தனி ஆகிய சொற்களின் பின் -  இனிக் காண்போம் ,  தனிச்சிறப்பு
10 .மிக  என்னும் சொல்லின் பின் -   மிகபெரியவர்
11 . எட்டு , பத்து என்னும் பெயர்களின் பின் -  எட்டுத்தொகை , பத்துப்பாட்டு
12. ஓரெழுத்து ஒரு மொழிக்கு பின் -  தீப்பிடித்தது , பூப்பந்தல்
13 . ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் - கூவாக்குயில் ,  ஓடாக் குதிரை
14.  வன்தொடர்க் குற்றியலுகரங்கள்  நிலைமொழியாக இருந்து புணர்கையில் -  கேட்டுக்கொண்டான் , விற்றுச்சென்றான் .
15 .( அகர இகர ஈற்று )  வினையெச்சங்களுடன் புணர்கையில் - ஆடச்சென்றார் , ஓடிப்போனார் .

Education  : 
16 . ஆறாம் வேற்றுமைத் தொகையில்  வல்லினம் மிகும் இடங்கள் எடுத்துக்காட்டு தருக .
புலித்தோல்  -
புலியினதுதோல் - அது -  ஆறாம் வேற்றுமைத்தொகை
17.   திசை பெயர்களின் பின் வல்லினம்  எவ்வாறு மிகும் ?
கிழக்குப்பகுதி , மேற்குப்பகுதி ,  தெற்குப்பகுதி ,  வடக்குப் பக்கம்
18 . இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்  இன்னும் இதுவரை எடுத்துக்காட்டுடன் விளக்கு .
   மல்லிகைப்பூ  -
சித்திரைத் திங்கள்
19 . உவமைத் தொகையில் வல்லினம் மிகுவதை எடுத்துக்காட்டு தருக ..
தாமரைப் பாதம்
20. சால , தவ , தட , குழ  என்னும் உரிச்சொற்களின் பின்  மிக வரை கூறுக .
சாலப் பேசினார் ,  தவச் சிறிது
21.   தனிக் குற்றெழுத்துகள் அடுத்து வரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகுவதைக் கூறுக
நிலாச்சோறு .  கனாக்கண்டேன்.

22. சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும் கூறுக .
வாழ்க்கைப்படகு ,உலகப் பந்து


கற்பவை கற்றபின்.... ப.எண் :80

9 th Students  :
1. வல்லினம் மிகலாமா  ?
அ)  பெட்டிச்செய்தி
ஆ)   விழாக்குழு
இ)  கிளிப்பேச்சு
ஈ)   தமிழ்த்தேன்
உ)  தைப்பூசம்
ஊ) கூடக்கொடு
எ)  கத்தியை விடக் கூர்மை
ஏ )  கார்ப்பருவம்

2.  தொடர்தரும் பொருளைக் கூறுக .
அ)  சின்னக் கொடி -  சின்னத்தை உடைய கொடி
சின்ன கொடி -  சிறிய கொடி

ஆ) தோப்புக்கள் -  தோப்பில் கிடைக்கும் கள்
தோப்புகள் -  மரங்கள் அடர்ந்த பகுதி
இ) கடைப்பிடி -  பின்பற்று
    கடை பிடி -  கடையைப் பிடி
ஈ)  நடுக்கல் -  கைகள் நடுங்குதல்
   நடுகல்  -  இறந்தவர்களுக்கு நடும் கல்
உ) கைம்மாறு - உதவி செய்தல்
கைமாறு - கையிலிருந்து மாற்றுதல்
ஊ)  பொய்ச் சொல்  - பொய்யான சொல்
பொய்சொல் - பொய்பேசுதல்


---------------------------------------------------------------------------------------------------------------------








 

Comments