9 Th Standard - Grammar - ஒன்பதாம் வகுப்பு - கற்கண்டு - வல்லினம் மிகா இடங்கள் | Tamil Online Study

9  Th Standard  - Grammar - ஒன்பதாம் வகுப்பு -  கற்கண்டு  -  வல்லினம் மிகா இடங்கள் | Tamil Online Study

இயல் -4        ப.எண் : 113

Education  - கல்வி  -  9 ஆம் வகுப்பு  

1. வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துடக்காட்டுடன்  விளக்குக .

       நாம் பேசும் போதும்  எழுதும்  போதும் பொருள் மயக்கம் தராத வகையில் மொழியைப் பயன்படுத்துவதற்கு வல்லினம் மிகா இடங்களை அறிவது இன்றியமையாததாகும் .

எ.கா :
தோப்புக்கள் -  தோப்பிலிருந்து குடிக்கும் கள் .
தோப்புகள் -  தோப்புகள்
  கத்திக் கொண்டு வந்தான்  -  அதிகமாக சத்தம்  போடுதல்
கத்தி கொண்டு வந்தான் .  கத்தியைக் கொண்டு வந்தான் என்ற பொருள் .

For 9 th Students 

2. வல்லினம் மிகா இடங்கள்  :

1 .  அது செய் , இது காண்  -  அதுஇது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது .
2.   எது கண்டாய் ?  எவை தவறுகள் ? -  இவ்வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது .
3.  குதிரை தாண்டியது ,  கிளி பேசும் -  தொடரில் வல்லினம் மிகாது .
4. அண்ணனோடு போ , எனது சட்டை - 3 ஆம் ,6 ஆம்  வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது .
5.  தந்தையே பாருங்கள் ,  மகளே தா -  விளித் தொடர்களில் வல்லினம் மிகாது .
6. வந்த சிரிப்பு , பார்த்த பையன் - பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது .
7. நாடு கண்டான் ,  கூடு கட்டு -  இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது .
8 .  வரும்படி சொன்னார் , பெறும்படி கூறினார் -  படி என்று முடியும்  வினையெச்சத்தில் வல்லினம் மிகாது .
9.  வாழ்க தமிழ் ,  வாழ்க தலைவா -  வியங்கோல் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது .
10.  குடிதண்ணீர் , வளர்பிறை , திருவளர்ச்செல்வன்  -  வினைத்தொகையில் வல்லினம் மிகாது .


9 th  Std ..Education 

3.  கற்பவைவை கற்றபின் ....      ப.எண் : 115

1.  வல்லினம் வருமா ?
அ)  தோழி _____ கூற்று
ஆ)  பெரிய __  தம்பி
இ)  சிறிய____ பறவை
ஈ)  பழகு ___தமிழ்
உ) இது _____கேள்
ஊ) எலி ___ கடிக்கும்
எ )  ஓடிய_____  குதிரை
ஏ )  தரும்படி ____ சொன்னார்
ஐ ) வாழ்க ____ தலைவர்
ஒ )  கார் ___காலம்


பதில்  :    இவை அனைத்திலும் வல்லினம் வராது .



2 . வல்லினம் இடலாமா ?

அ)  வாழ்த்து __  கள்
ஆ)  எழுத்து __ கள்
இ )  திருநிறை __  செல்வன்
ஈ )  திருவளர் __ செல்வி


பதில்  :  இவை அனைத்திலும்  வல்லினம் இடக்கூடாது .
9 th Education  :
3 .  எது சரி ? எது தவறு  ?  காரணம் கூறுக .

அ)  அண்ணாமலைப் பல்கலைக் கழகம்  -  சரி
*  உயிர் ஈற்றின் முன் கசதப மிகும்
ஆ)  அத்தனைச் சிறிய -  தவறு .
*  அத்தனை ,இத்தனை , எத்தனை  என்ற சொற்களின்  பின் வல்லினம் மிகாது .
இ)  ஆத்திச்சூடி - தவறு
*   இரண்டாம் வேற்றுமைத் தொகையில்  வல்லினம் மிகாது .
ஈ)  எடுத்துக்காட்டுகள் - சரி
*   உயிரீற்றின் பின்  வல்லினம் மிகும் .
உ)  கீழ்பக்கம் -  தவறு
* ய ,ர ,ழ  எழுத்துக்கள் இறுதியில் வந்தால் அவற்றின் முன் கசதப  மிகும் .
ஊ) சான்றோர் பேரவை - சரி
*  எழுவாய் தொடரில் மிகாது .
எ)   சென்னைப் பல்கலைக்கழகம் - சரி  .
* உயிரீற்றின் மு
பின் க ச த ப மிகும் .
ஏ) தயிர்ச்சோறு - சரி .
*  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வல்லினம் மிகும் .
4.  கீழ்காணும் தொடர்களில் வல்லினம் மிகும் , மிகா இடங்களைக் கண்டறிந்து அதற்கான  இலக்கணம் அறிக .
அ )  வங்கி கடன்  - வங்கிக் கடன் என வர வேண்டும். 
*  உயிரீற்றின் பின் க ச த ப மிகும் .
ஆ)  பழங்களை பறிக்காதீர்கள் -  பழங்களைப் பறிக்காதீர்கள் என எழுத வேண்டும் .
* இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும் .
இ)  திட்ட குழு -  திட்டக்குழு
*   உயிரீற்றின் பின் க ச த ப மிகும் .
ஈ )  அரசு ஆணை பிறப்பித்தது -
*  இரண்டாம் வேற்றுமைத் தொகையில்  வல்லினம் மிகாது .
உ)  மருந்து கடை - மருந்துக்கடை
*  உயிரீற்றின் பின் வல்லினம் மிகும் .
ஊ)  வேலையில்லா பட்டதாரி -   வேலையில்லாப் பட்டதாரி .
*  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம்  மிகும் .
எ) சிறப்பு பரிசு -   சிறப்புப் பரிசு
* உயிரீற்றின் பின் கசதப மிகும் .


_______________________________________-------------------------------------------------------------

  

Comments