10 Th Standard -இயல் - 3 -1,2,3, 8 Mark Question @ Answer - பத்தாம் வகுப்பு - 1,2,3,8 மதிப்பெண் வினாக்கள்-Tamil Online Studies

10 Th Standard  -இயல் -  3  -1,2,3, 8 Mark Question @ Answer - பத்தாம் வகுப்பு - 1,2,3,8  மதிப்பெண் வினாக்கள்-Tamil Online Studies  

1 மதிப்பெண் வினாக்கள்

 1. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்த காரணமாக அமைவது _____

அ)  வேற்றுமை உருபு

----------------------------------------------------------------------------

2 Mark Questions  :

இயல் -  3       ப.எண்  : 65

1 . ' எழுது என்றாள்'  என்பது விரைவு காரணமாக ' எழுது  எழுது  என்றாள் '  என  அடுக்குத்தொடரானது . ' சிரித்துப் பேசினார்' என்பது  எவ்வாறு அடுக்குத்தொடராகும் ?
' சிரித்துச் சிரித்துப் பேசினார் ' என்பது மகிழ்ச்சி காரணமாக அடுக்குத்தொடரானது .

2.. பாரதியார் கவிஞர்,  நூலகம் சென்றார் . அவர் யார் ?  ஆகிய தொடர்களில் எழுவாயுடன்  தொடரும் பயனிலைகள் யாவை ?
            எழுவாய் உடன் பெயர் ,  வினை , வினா  ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும் .
* பாரதியார் கவிஞர் - பெயர்
* நூலகம் சென்றார் -  வினை
* அவர் யார் ?  -  வினா
           மேற்கண்ட  முன்று தொடர்களில் எழுவாயுடன் பெயர் , வினை ,  வினா ஆகியவற்றிற்கான  பயனிலைகள் தொடர்ந்து வந்து  எழுவாய் தொடர்கள் அமைந்துள்ளன .
 -----------------------------------------------------------------------------------------------

திருக்குறள் -  குறுவினாக்கள் :          ப.எண்  : 74

16. ' நச்சப் படாதவன் ' செல்வம் -  இத்தொடரில்  வண்ணமிட்ட சொல்லுக்குப்  பொருள் தருக .
நச்சப் படாதவன் -  பிறருக்கு உதவி செய்யாதவன் . 
பிறருக்கு உதவி செய்யாததால்  ஒருவராலும் விரும்பப்படாதவர்  பெற்ற செல்வம்  என்பது பொருள் .

17.  கெடுப்பதூஉம் துய்ப்பதூஉம்  இல்லார்க்கு அடுக்கிய
       கோடிஉண் டாயினும் இல் .         -  இக் குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக .

கொடுப்பதும் ,  துய்ப்பதூஉம் -  இன்னிசை அளபெடைகள்

18 . பொருளுக்கேற்ற அடியை பொருத்துக .
1.  உயிரை விட சிறப்பாக பேணி காக்கப்படும் .  -  உயிரினும் ஓம்பப் படும் .
2 . ஊரின் நடுவில் நச்சு மரம்பழுத்தது போன்றது . -  நடு ஊருள்  நச்சு மரம் பழுத்ற்று .
3 . ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் . -  ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை .

19 .  எய்துவர் எய்தாப் பழி -  இப்படிக்கு பொருந்தும் வாய்பாடு எது ?
 அ )  கூவிளம் தேமா மலர்
----------------------------------------------------------------------------------------------

10th Standard 3 Marks Questions & Answers - பத்தாம் வகுப்பு - 3 மதிப்பெண் வினாக்கள் - சிறுவினா | Tamil Online Studies 

10 -Education - சிறுவினா
இயல்  - 3   ப.எண் : 66

1 .  ' கண்ணே கண்ணுறங்கு !
        காலையில் நீயெழும்பு  !
        மாமழை பெய்கையிலே !
        மாம்பூவே கண்ணுறங்கு !
        பாடினேன் தாலாட்டு !
        ஆடி ஆடி ஓய்ந்துறங்கு !
 -- இத்தாலாட்டு பாடலில் அமைந்துள்ள   தொடர் வகைகளை  எழுதுக.

1 . கண்ணே கண்ணுறங்கு -  விளித்தொடர்
2. காலையில்  நீயெழும்பு -   வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
3. மாமலை பெய்கையிலே -  உரிச்சொல் தொடர்
4. மாம்பூவே கண்ணுறங்கு -  விளித்தொடர்
5.  பாடினேன் தாலாட்டு - வினைமுற்று தொடர்
6. ஆடி ஆடி ஓய்ந்துறங்கு -  அடுக்குத்தொடர்


-------------------------------------------------------------------------------
2. வேலொடு நின்றான் இடுஎன்றது  போலும்
கோலொடு நின்றான் இரவு 
---குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.  

இக்குறளில் உவமைஅணி அமைந்துள்ளது. 
 
உவமைஅணி :
          ஒரு பொருளை ஒப்புமைப்படுத்தும் போது ,   உவமை தனித்தொடராகவும்  உவமேயம் தனித் தொடராகவும் அமைந்து , இடையில் உவமஉருபு  வெளிப்படையாக வருவது  உவமை அணி ஆகும்.

குறள் விளக்கம்:


       வேலைக் கையில் ஏந்தி நின்று வழிப்பறி செய்யும் கள்வர்களைப் போல,  ஆட்சியில் கொடுங்கோலைக் கையிலேந்தி  குடிமக்களிடம் வரி விதித்து  பொருள் பெறுவதாகும் . 

அணிப் பொருத்தம்:

வேலொடு நின்றான் இடுஎன்றது  - உவமை
கோலொடு நின்றான் இரவு -  உவமேயம் (  பொருள் )
போலும் -  உவம உருபு
இக்குறளில் உவமை தனித்தொடராகும் , உவமேயம் தனித் தொடராகும்  அமைந்து ,  போலும் என்னும் உவம உருபு வெளிப்படையாக வந்துள்ளதால்  இது  உவமை அணி ஆயிற்று .



------‐----------------------------------------------------------------

10 Th Standard 8 Mark Question @ Answer -Thunaipadam - பத்தாம் வகுப்பு - 8  மதிப்பெண் வினா-விரிவானம்  -  கோபல்லபுரத்து மக்கள் -Tamil Online Studies  

இயல் - 3    ப . எண் : 66 
Essay writing ;

1.  அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பட்டனை   கோபல்லபுரத்து மக்கள்   கதைப்பகுதி  கொண்டு விவரிக்க .

முன்னுரை 
             அன்னமய்யா  என்ற கதாபாத்திரம்  கரிசல் எழுத்தாளர் கி . ராஜநாராயணன்   என்பவரால் கோபாலபுரத்து  மக்கள்  என்ற நூலில்   எழுதப்பட்டுள்ளது . இந்நூல் 1991 ஆம்  ஆண்டிற்கான சாகித்ய அகாதமி பரிசினைப் பெற்றது . 
அன்னமய்யாவுடன் வந்த வாலிபன் :
            அன்னமய்யா தற்செயலாக   அந்தப் பக்கம  வந்தபோது  அவர் கண்ணில் தென்பட்டான் அந்த வாலிபன் . அவன் கால்களை நீட்டி ,   புளியமரத்தில் சாய்ந்து  உட்கார்ந்திருந்த அவனை   நெருங்கிப் போய் பார்த்தபோது ,  பசியால் வாடி போய்விட்ட  அந்த முகத்தில்  கண்களின் தீட்சண்யம் ,  கவனிக்கக் கூடியதாய்  இருந்தது . அன்னமாய்யாவைப் பார்த்ததும்  சிறு புன்னகை காட்டினான் .  அவனைப் பார்த்ததும்  அன்னமையாவுக  பத்துக் குழந்தைகள் லாட சன்னியாசி விளையாட்டு விளையாடுவது    அன்னமையாவுக்கு  ஞாபகம் வந்தது .
points ;
நீச்சுத் தண்ணி :
              அன்னமய்யாவை பார்த்த வாலிபன் "  தம்பி ,  கொஞ்சம் குடிக்கத் தண்ணி கிடைக்குமா ? "  என்று கேட்டது சந்தோஷமாக இருந்தது ." இந்தா  பக்கத்துல  அருகெடுத்துக்கிட்டு இருக்கிறவங்க கிட்ட  நீச்சுத் தண்ணி இருக்கும் ;  வாங்கிட்டு வரட்டுமா ?"  என்றார் .
                      இருவரும் மெல்ல நடந்து  வேப்பமரத்தின் அடியில் சென்றனர் .அங்கே ஏகப்பட்ட கலயங்கள் , கருப்புக் கலயங்கள்  தேங்காய்ப்பருமனுள்ள கற்களால்  மூடப்பட்டு ,  மண் தரையில்  பாதி புதைக்கப்பட்டிருந்தன. ஒரு கல்லை அகற்றினான் . ஒரு  சிரட்டையில்  காணத் துவையலும்   ஊறுகாயும் ,  மோர் மிளகாய்  போன்றவை இருந்தது .சிரட்டையே   கலயத்தின்  மூடியாக இருந்தது . ஒரு சிரட்டையில்  நீத்துபாகத்தை   வடித்து அவனிடம் திட்டினான் .
10 th Students
" சும்மா கடிச்சு குடிங்க  " - ஜீவ ஊற்று :
                    கையில் வாங்கியதும்  சப்பிக்குடிப்பதா அண்ணாந்து குடிப்பதா என்ற தயக்கம்  வந்தபோது " சும்மா கடிச்சுக் குடிங்க "என்றான் அன்னமய்யா.. உறிஞ்சும்போது  கண்கள் சொருகின . தொண்டையில்  இறங்குவதன் சொகத்தை முகம் சொல்லியது.
  'உட்காருங்க உட்கார்ந்து குடிங்க' என்று உபசரித்தான் .
ரண்டாவது சிரட்டைக்கு   சோற்றின் மகுளி மேலே வந்ததும்   வார்த்துக் கொடுத்தான் .  அதைக் குடித்ததும் ' ஹ ! "  என்றான் .
மடக்கும்  மடக்காய்  அவனுள் ஜீவஊற்று பொங்கி நிறைந்து வந்தது .
மனநிறைவு :
     சிரட்டையைக் கையளித்துவிட்டு  அப்படியே வேப்ப மரத்து நிழலிலே சொர்க்கமாய் படுத்துத்  தூங்கினான் .அன்னமய்யாவுக்கு  மேலான மனநிறைவு ஏற்பட்டது .
மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும்  போதே   வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கிவிடும் குழந்தையைப் பார்ப்பது போல அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
கண் விழிக்க காத்திருந்த  அன்னமய்யா :
        வாலிபனின் சிறு தூக்கம் முடியும்வரை   காத்திருந்த அன்னமய்யா.  அந்தப் பக்கத்தில்   "அருகு "எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
  வாலிபனுக்கு முழிப்பு வந்ததும்  தன் பிரண்டு சுப்பையாவிடம்  கூட்டிச்சென்றான் . செல்லும் வழியில் 
பேசிக்கொண்டே சென்றனர் .
"  எங்கிருந்து வர்ரீங்க . எங்க போகணும் ?" 
"  ரொம்பத் தொலவட்லயிருந்து வர்ரென் ;  எங்கதெ பெரிசு ! " என்றான் . தம்பீ ஒம் பெயரென்ன ?"
" அன்னமய்யா "
பெயருக்கேற்ற   பொருத்தம் :
"எனக்கு இன்று நீ இடும் அன்னம் தான "....
                 வாலிபன்  அந்தப் பேரை  மனதுக்குள் திரும்பத் திரும்பச் சொல்லி பார்த்துக் கொண்டான் . எவ்வளவு பொருத்தம் என்று நினைத்துக் கொண்டான் போலிருக்கிறது ! 
"  எனக்கு  இன்று நீ இடும் அன்னம் தான் "....
  பதிலுக்கு வாலிபனிடம்  என்ன என்று கேட்டான் . பெயர் பரமேஸ்வரன் எனவும் இப்போது மணின்னே  கூப்பிடு என்றான் .
" இப்போ நாம எங்க போகணும் சொல்லு "  என்றான் . "அந்தோ...அங்கெ " ,   என்று கைகாட்டினான் .
"  அங்கெ என்னொட பிரண்டு -  சுப்பையா ன்னு பேரு -  காலேஜ்ல படிக்கான் .   லீவுக்கு வந்திருக்கான் . அவங்க பிஞ்சையிலேயும்  அருகெடுக்கிறாங்க ,  அங்க போவமா ?  "
" ஓ !  போவமே " 
   அன்னம் வழங்கிய அன்னமய்யா :
            அன்னமய்யாவையும்    புதுஆளையும் பார்த்து  வரவேற்று  உண்ணும்படி உபசரித்தார்கள் . மணி அவர்களோடு சேர்ந்து சாப்பிட்டான் .
இடதுகைச் சோற்றில்  ஒரு  சிறு பள்ளம் செய்து  அதில் துவையலை வைத்தார்கள் .  சிரிது சோற்றை எடுத்துத்  துவையலில் பட்டதோ படலையோ என்று  தொட்டு கழுக்  என்று  முழங்கினார்கள் .  அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஊர்க் கதைகள் பேச ஆரம்பித்தார்கள் . மணி திரும்பவும் படுத்து அமைதியாக கண்களை மூடிக் கிடந்தார் .

இக்கதை  அன்னமய்யாவின்   பெயருக்கும் அவரின் செயல்களுக்கும்  உள்ள பொருத்தப்பட்டனை   விளக்குகிறது .  

----------------------------------------------------------------------------------------------------------------

Comments