New Syllabus -10 Th Standard -இயல் -6 ,7 -1,2,3 Mark Question @ Answer - பத்தாம் வகுப்பு - 1,2,3, மதிப்பெண் வினாக்கள்-Tamil Online Studies

 New Syllabus -10 Th Standard  -இயல் -6 ,7 -1,2,3 Mark Question @ Answer - பத்தாம் வகுப்பு - 1,2,3,  மதிப்பெண் வினாக்கள்-Tamil Online Studies  

 இயல் - 6


1 . குளிர் காலத்தைப் பொழுதாக கொண்ட நிலங்கள் _______
இ)  குறிஞ்சி ,  மருதம் , நெய்தல்

2. ஒயிலாட்டத்தில்  இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர் . இத்தொடரின்  செயப்பாட்டு வினைத் தொடர் எது ?
இ )  ஒயிலாட்டம் ,  இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது .

3 . மலர்கள் தரையில் நழுவும் - எப்போது ?
ஆ)  தளரப் பிணைத்தால்

4 . கரகாட்டத்தைக்  கும்பாட்டம் என்றும்  குடக்கூத்து என்றும்  கூறுவர் . இத்தொடருக்கான வினா எது ?
ஈ )  கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை ?

5.  கோசல நாட்டில் கோடை இல்லாத காரணம் என்ன ?
ஈ)  அங்கு வறுமை இல்லாததால்இயல் - 6      ப.எண்  : 147

31 . காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு  மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும் .  இத்தொடரில் அமைந்துள்ள  முதற்பொருள், கருப்பொருள்களை  வகைப்படுத்தி எழுதுக .
 முதற்பொருள் :
நிலம் -  காடும் காடு சார்ந்த இடமும் -  முல்லை
பெரும்பொழுது -   மழைக்காலம் ,  கார்காலம்
சிறுபொழுது -  மாலைப்பொழுது


கருப்பொருள் :    உணவு -  வரகு .

32 ." நேற்று நான் பார்த்த  அருச்சுனன்  தபசு என்ற கூத்தில்  அழகிய ஒப்பனையையும்   சிறந்த நடிப்பையும்  இனிய பாடல்களையும்  நுகர்ந்து மிக மகிழ்ந்தேன் ! "  என்று சேகர் என்னிடம் கூறினான் . இக்கூற்றை அயர்கூற்றாக எழுதுக. 
  முன்தினம்  அவன் பார்த்த 'அர்ச்சுனன் தபசு '  என்ற கூத்தில்  அழகிய ஒப்பனையையும் ,  சிறந்த நடிப்பையும்  இனிய பாடல்களையும்  நுகர்ந்து  மிக மகிழ்ந்ததாகச்  சேகர் என்னிடம் கூறினான் .

33. உறங்குகின்ற கும்பகன்ன "  எழுந்திராய் எழுந்திராய் "
காலதூதர் கையிலே "  உறங்குவாய் உறங்குவாய் "
கும்பகன்னனை  என்ன சொல்லி எழுப்புகிறார்கள் ? எங்கு அவனை உறங்கச்  சொல்கிறார்கள்  ?
*  "உறங்குகின்ற கும்பகன்னனே!பொய்யான உன் வாழ்வு அழியத் தொடங்கிவிட்டது.அதனைக் காண எழுந்திருப்பாயாக " என்று எழுப்புகின்றனர்.
* "காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லைப் பிடித்து எமதூதர் கையில் இனிப் படுத்து உறங்குவாயாக " என்று கம்பர் இயற்றியுள்ளார் .
35 . கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக .
     உழவர்கள் மழையின் உழுதனர் .
  முல்லைப் பூச் செடியைப்  பார்த்தவாரே பரதவர் கடலுக்குச் சென்றார் .

உழவர்கள் வயலில் உழுதனர்.
முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே ஆயர்கள் காட்டிற்குச் சென்றனர். [முல்லைத் திணை ]

           (அல்லது)
உழவர்கள் வயலில் உழுதனர்.                                           
நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர் .
 [நெய்தல்  திணை ]           
       (அல்லது)
உழவர்கள் வயலில் உழுதனர். 
தாழைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர் .[நெய்தல்  திணை ]   

--------------------------------------------------------------------

திருக்குறள் -  குறுவினாக்கள்:   ப.எண்  : 157

1. கரப்பிடும்பை இல்லார் -  இத்தொடரின் பொருள் கூறுக .
" தம்மிடம் உள்ள பொருளை மறைத்து வைத்தல்  என்னும்  துன்பம் தராத  நல்லவர் "  என்பது பொருள் .

2 . தஞ்சம் எளியன் பகைக்கு -  இவ்வடி குரிய அசைகளையும்  வாய்பாடுகளையும் எழுதுக .
சீர்        -          அசை      -        வாய்பாடு
தஞ் | சம் -     நேர் - நேர்     -     தேமா
எளி | யன் -   நிரை  - நேர்  -    புளிமா
பகைக் | கு -   நிரைபு --          பிறப்பு


3 . வறுமையின் காரணமாக உதவிகேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன ?
            வறுமையின்  காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடாமல்  கொடுப்பவரைக் கண்டால் , இரப்பவரின் உள்ளத்திலே மகிழ்ச்சிப் பொங்கும் .

-------------------------------------------------------------------------------------

சிறுவினா - Students

திருக்குறள்  -   ப.எண் : 158


1. வள்ளுவம் ,  சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும்  பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.

* தொழில் செய்வதற்குத் தேவையான  கருவி ,  அதற்கு ஏற்ற காலம் ,  செயலின் தன்மை , செய்யும் முறை  அரிய செயல்களைச் செய்தல்  வேண்டும்.

* மனவலிமை , குடிகளைக் காத்தல் , ஆட்சி முறைகளைக் கற்றல் , நூல்களைக் கற்றல் , விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைதல் வேண்டும்.


* இயற்கையான நுண்ணறிவும்  நூலறிவும் உடைய அமைச்சர்களுக்கு முன் ,  மட்டமான சூழ்ச்சிகள்  நிற்க  இயலாது.


* ஒரு  செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும் ,  உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும் .

எனவே இவ்வாறு   நன்மை ,  தீமைகளை அறிந்து சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்களை பின்பற்ற வேண்டும் .

2.  பலரிடம் உதவி  பெற்று கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர்,  அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை.  அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை ?

* சுற்றத்தாரிடம்  ஒருவர்
 அன்பு இல்லாமலும் 
பொருந்திய துணை இல்லாமலும் , 
வலிமை இல்லாமலும் இருந்தால் 
அவர் எப்படிப்பட்ட பகைவரின் வலிமையையும் வெல்லமுடியாது .
*  மனத்தில் துணிவு இல்லாதவராய் ,  
அறிய வேண்டியவற்றை அறியாதவராய் ,  
பொருந்தும் பண்பு இல்லாதவராய் , 
 பிறர்க்குக்  கொடுத்து உதவாதவராய்  இருந்தால்  
எளிதில் பகைக்கு ஆட்பட நேரும்.
-----------------------------------------------------------------------------------

 New Syllabus -10 Th Standard  -இயல் -,7 -1,2,3 Mark Question @ Answer - பத்தாம் வகுப்பு - 1,2,3,  மதிப்பெண் வினாக்கள்-Tamil Online Studies 

இயல் -7

1.  சரியான அகர வரிசையை தேர்ந்தெடுக்க .
இ)  உழவு ,  ஏர் ,  மண் ,  மாடு

2. ' மாலவன் குன்றம் போனாலென்ன ? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ' மாலவன் குன்றம் வேலவன் குன்றமும் முறையே ..
அ)  திருப்பதியும் திருத்தணியும்

3. " தன் நாட்டு மக்களுக்குத்  தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன் "  என்னும் மெய்க்கீர்த்தித்  தொடர் உணர்த்தும் பொருள் ...
ஈ)  நெறியோடு நின்று காவல் காப்பவர்

4. இரு நாட்டு அரசர்களும்   தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்______
இ)  வலிமையை நிலைநாட்டல்

5.  தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி.  கருதியது_____
ஈ)  சிலப்பதிகாரம்
-------------------------------------------------------------------------------------------------

இயல் - 7        ப.எண்  : 178

1 . பாசவர் ,  வாசவர் ,  பல்நிண விலைஞர் , உமணர் -  சிலப்பதிகாரம் காட்டும் வணிகர்கள் யாவர் ?
பாசவர் -  வெற்றிலை விற்பவர் .
வாசவர் -  ஏலம் முதலான ஐந்து நறுமணப் பொருள்கள் விற்பவர் .
பல்நிண விலைஞர் -  பலவகையான இறைச்சி விற்பவர்
உமணர் - வெண்மையான உப்பு விற்பவர் .

2 . மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது ?
*அரசர்கள்  தங்கள் வரலாறும் பெருமையும்  கடந்து நிலைக்க ,  அழியாத வகையில் அதனை கல்லில் செதுக்கினார்கள்  .
*  தங்களின் செய்திகளைக்  கல்வெட்டுகளிலும்  செப்பேடுகளிலும் பொறித்து  வைத்துள்ளனர் . இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவது நோக்கமாகும் .

3 . வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம. பொ .சி . என்பதற்கு சான்று தருக .
* ம.பொ.சி  குடும்பத்தின் வறுமையால்   நூல் வாங்குவதற்கு போதிய பணம் இல்லாத குறையால் பழைய புத்தகங்கள் விற்கும் கடைக்குச் சென்று விருப்பமான புத்தகங்களை விலைக்கு வாங்குவதை  வழக்கமாக்கிக் கொண்டார் .
*   உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில்  புத்தகங்கள் வாங்கிவிட்டு ,  பல வேளைகளில் பட்டினி கிடந்து ,  குறைந்த விலைக்கு நல்ல நூலொன்று கிடைத்ததே என்று  பேரானந்தம் அடைவார் .
*  தன் வாழ்நாளில்  முயன்று சேர்த்து வைத்துள்ள  சொத்துக்கள்  பல்லாயிரக்கணக்கான நூல்களைத்  தவிர வேறில்லை  என்று உறுதியாக கூறி இருப்பது வறுமையிலும் மீது நாட்டம் கொண்டவர் மா.பொ.சி . என்பதற்குச் சான்று ஆகும் .

4 . புறத்திணைகளில் எதிரெதிர்  திணைகளை அட்டவணைப்படுத்துக .
புறத்திணைகள் எதிரெதிர் திணைகள்:
வெட்சி ×  கரந்தை
வஞ்சி ×  காஞ்சி
உழிஞை ×  நொச்சி

5 . பொருத்தமான இடங்களில் நிறுத்தற் குறியிடுக.
   பழங்காலத்திலே  பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி  நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி  விடுதலைப் போரில்  ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் . - ம. பொ .சி .

விடை  : ப. எண் : 161
        பழங்காலத்திலே  பாண்டியன்  ஆண்ட பெருமையைக் கூறி ,  சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி '  சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி ,   நம் அருமைத் தமிழ்நாடு , ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப்போரில்  ஈடுபட வருமாறு  தமிழர்க்கு  அழைப்பு விடுத்திருந்தேன் . - ம. பொ .சி .

-----------------------------------------------------------------------------------------Comments